சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் உளுந்து பயிர் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 21 February 2023

சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் உளுந்து பயிர் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் உளுந்து பயிர் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கீழ் கொள்ளிடம் உபவடிகால் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


இத்திட்டத்தின் மூலம்  குமராட்சி ஒன்றியம் சிவாயம் கிராமத்தில் உளுந்து பயிரில் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் மண்டல பழச்ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந. தவபிரகாஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படி திட்ட பொறுப்பு விஞ்ஞானி முனைவர் ச. அரிசுதன்     அவர்கள் உளுந்து பயிரில் ரகங்கள்  பற்றியும்,களை மேலாண்மை பற்றியும், டிஏபி 2 சதவீதம் கரைசல் தயாரித்து தெளிக்கும் முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.



இணைப்பேராசிரியர் முனைவர் பரமசிவம் அவர்கள் உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றியும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரி செந்தில்குமார், இளநிலை ஆராய்ச்சியாளர்கள், தொழில் நுட்ப உதவி யாளர்கள் மற்றும் விவசாயிகள்  கலந்து கொண்டனர். முன்னோடி விவசாயி கோவிந்தசாமி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இறுதியில் முன்னோடி விவசாயி ஜவகர் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/