குறிஞ்சிப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் வயது 35 இவர் ஆடூர்லிருந்து குறிஞ்சிப்பாடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர் திசையில் குறிஞ்சிப்பாடியில் இருந்து புவனகிரி நோக்கி கார் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் என்பவர் வலதுபுரம் தீடிரென ஏரி சென்றதால் கார் ஓட்டுநர் நிலைதடுமாறி வலது பக்கம் வளைந்தார் அப்போது எதிர்பாராத விதமாக கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் பலத்த காயமடைந்தார் பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment