கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பெரிய நெற்குணம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள சின்னப்பா என்பவரின் மகன் தர்மலிங்கத்திற்கு தோட்டத்தில் மூங்கில் தோப்பு உள்ளது.
22/02/2023 புதன்கிழமை மதியம் சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய நெற்குணம் கிராமத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது. தங்கள் ஊரில் மூங்கில் தோப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் அந்த தீயை தங்கள் ஊர்க்காரர்களால் கட்டுப்படுத்தி அணைக்க முடியவில்லையென்றும் ஆகவே நீங்கள் தீயணைப்பு நிலையத்திலிருந்து உடனடியாக புறப்பட்டு வந்து தீயை அணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அழைத்தவுடன் வந்து சமயோகிதமாக யோசித்து செயல்புரிந்து சில மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்களை மூங்கில் தோப்பின் உரிமையாளரும் பெரிய நெற்குணம் கிராம மக்களும் பாராட்டினர்.
No comments:
Post a Comment