குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:என்.எல்.சி நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதையும் வேளாண்மையையும்,சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பாமக மற்றும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நன்கு அறிவார்.
மேலும் என்.எல்சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப் படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத்தர உழவர்கள் விரும்பவில்லை. நிலங்களை அளப்பதற்காக சென்ற என்.எல்.சி. மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடித்ததில் இருந்தே விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் என்.எல்.சி.க்கு பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிலம் வழங்கியதாகவும், அவ்வாறு நிலம் வழங்கியவர்களில் 10 பேருக்கு
என்.எல்.சி.பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலம் கையகப்படுத்துவதை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தங்களுக்குச் சாதனமாக செயல்படும் சிலரை வைத்துக்கொண்டு இதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது நியாயமற்றது. உழவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக உறுதியேற்றுக் கொண்ட வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் நிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation pipeline) திட்டத்தின் கீழ் என்.எல்.சி. நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட விருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்திற்கு உழவர்களின் நிலங்களை பறித்துத் தருவது நியாயமல்ல.
தமிழ்நாட்டில் 2040 - ஆம் ஆண்டுக்குள் நிகரச் சுழிய கரிம உமிழ்வு (Net Zero Carbon Emissions) நிலை ஏற்படுத்தப்படும் என்று தாங்களே அறிவித்திருக்கிறீர்கள். இதற்கான நிலக்கரி சுரங்கங்களை மூடுதல் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முரணாக புதிய நிலக்கரி சுரங்கங்கள் அனல்மின் நிலையங்களை அமைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 1985- ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படவில்லை.
அந்த நிலங்கள் இருந்தும் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். இத்தகைய சூழலில் என்.எல்.சி.க்கு அவசரம் அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் வேளாண் வளர்ச்சி உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அந்த பணிகளை கைவிட்டு என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தி தரும் எல்.ஐ.சியில் முகவர்கள் செயல்படுவது போல் இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் என்.எல்.சி முகவர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து சிதம்பரம்,புவனகிரி, காட்டுமன்னார்கோவில்,வீராணம் ஏரியை நிலக்கரி திட்டம் என்கிற பெயரில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்காக எம்.இ.சி.எல் (MECL) எனும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
பெரியப்பட்டு சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தை பாழாக்கும் திட்டங்களை உடனே நிறுத்த வேண்டும்.200 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் நிலக்கரி குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் அந்தப் பகுதியிலும் நிலக்கரி எடுக்க போகிறார்கள். ஏற்கனவே வீராணம் ஏரியை சுற்றியுள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். யாரும் எதிர்பாராத விதமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அவன் நினைத்துள்ளான்..அன்புமணி என்றால் decent And development politics னு.. வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- மேடையிலே வேட்டி மடித்து கட்டி மண்வெட்டியை கையில் பிடித்தபடி என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம் என பேசினார்.
காலநிலை மாற்றத்தால் பருவமழை குறைந்து வருகிறது. என்.எல்.சி. பிரச்சனை குறித்து போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்கள் வருவதில்லை. எந்த கட்சிகளும் வரவில்லை. காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய வறட்சி ஏற்படும். வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்படும். ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டது போல் கடலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்த வரவேண்டும்.
டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறிக்க துடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏன் போராட்டம் நடத்த வரவில்லை.
என்எல்சி நிறுவனத்திற்ககு ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். இதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம். இதில் விவசாயிகள், அனைத்துக் கட்சிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
நெய்வேலி பிரச்சினையில் இரு வேறு கொள்கைகளை தி.மு.க. கொண்டுள்ளது தி.மு.க. விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனது கொள்கையை தெளிவுப்படுத்த வேண்டும். சிப்காட், என்.எல்.சி., சைமா, வீராணம் திட்டம் போன்றவற்றால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன். ஆகவே இங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ,என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் எடுப்பதை விட்டு விடுங்கள். என்.எல்.சி. நிர்வாகம் இந்த மண்ணை விட்டு வெளியே வர வேண்டும்.
அதுவரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருங்கள். விரைவில் இது பற்றி அறிவிக்கிறேன்.
பாஜக மாநில தலைவர்அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
கோயம்புத்தூரில் அன்னூர் பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதற்கு 1500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முற்பட்டபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்தும் போது ஏன் இதுநாள் வரையில் குரல் கொடுக்காமல் இருக்கின்றார்கள்.இதில் ஏதாவது அரசியல் பின்னணி உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment