விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆலய கலையரங்கத்தில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக விருத்தாசலம் மாஸ்டர் அகாடமி சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக பரதநாட்டியம் கற்ற முதல் மாணவர்களுக்கு ஆடல் வல்லவன் சன்னதியில் குருமார்கள் சலங்கை அணிவித்து ஆசீர்வாதம் செய்தனர்.
மேலும் முழுமுதல் கடவுளான விநாயகரை போற்றி நிகழ்ச்சியை தொடங்கினர். மற்றும் சிவன்,பார்வதி, விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களுக்கு நாட்டிய அஞ்சலி செய்யப்பட்டது. மாடு மேய்க்கும் கண்ணா என்னும் நாட்டிய நாடகமாகவும், பாகாசூரன் படத்தில் இருந்து என்னப்பன் அல்லவா என்ற பாடலுக்கு நாட்டியமாட மாணவிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலி செய்து இறைவனுக்கு தங்கள் நாட்டியத்தை அர்பணித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டியாஞ்சலி விழா ஏற்பாட்டினை மாஸ்டர் அகாடமி நிறுவனர் குரு.பாபு, குரு.வகிதா பானு மற்றும் குழுவினர் செய்தனர்.
No comments:
Post a Comment