குறிஞ்சிப்பாடி அசோக் டெய்லர் கடையில் நூதன முறையில் புடவை திருட்டு அதிர்ச்சியான கடை உரிமையாளர் அசோக் டைலர்
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் பிரபலமான அசோக் டைலர் கடை இயங்கி வருகிறது இக்கடையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பெண் கடை உரிமையாளர் அசோக் டைலர் இல்லாத நேரத்தில் கடையில் வேலை செய்யும் நபரிடம் நான் புடவை ஜாக்கெட் கொடுத்திருந்தேன் ஜாக்கெட் ஓனரிடம் தைத்து வாங்கி விட்டேன் புடவை வாங்கவில்லை அதனால் எனக்கு புடவை அவசரமாக வேண்டும் புடவையை கொடு என்று நூதன முறையில் கேட்டு பெற்றுக்கொண்டு பெண் கிளம்பி விட்டார்.
நடந்து இரண்டு நாள் கழித்து உண்மையாக புடவை ஜாக்கெட் கொடுத்த நபர் வந்து கடை உரிமையாளரைக் கேட்டபோது புடவை தேடி உள்ளார் புடவை இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் கடை வேலையாட்களிடம் கேட்ட பொழுது கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பொம்பளை அவசரமாக ஊருக்கு செல்கிறேன் புடவை வேண்டும் என்று கேட்டவுடன் கொடுத்துவிட்டேன் வேறு வழியின்றி உண்மையாக புடவை கொடுத்த நபருக்கும் உரிமையாளருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்படும் சூழல் அமைந்தது வேறு வழியின்றி கடை உரிமையாளர் அவருக்கு ₹1500 விலைமதிப்புள்ள புடவையை முதல்வைத்து ஜவுளி கடைக்கு சென்று புதிதாக எடுத்து வந்து புடவை கொடுத்த நபரிடம் உரிமையாளர் அசோக் டெய்லர் கொடுத்து விட்டார்.
ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் ஏன் இந்த பதிவு என்றால் மற்ற கடைக்காரர்கள் உஷாராக இருக்கும்படியும் என்னை போன்று மற்ற கடைகாரர்கள் ஏமாறக்கூடாது எனதெரிவித்தார் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை யாரேனும் கண்டால் கடை உரிமையாளரிடமோ அல்லது காவல்துறையினரிடமோ தகவல் தெரிவிக்கலாம் . ஏனென்றால் நூதன முறையில் புடவை திருடுவது மட்டுமல்லாமல் வேற எந்த ஒரு பணமோ பொருளையும் திருடிச்செல்ல வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment