கடலூரில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா மேற்கொள்ளும் விழிப்புணர்வு பரப்புரைப் பயண பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாப்புலியூர் சன்னதி தெருவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கோ. க. மணி தலைமை தாங்குகிறார். அறக்கட்டளை வழக்கறிஞர் சண். முத்துகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றுகிறார். அறக்கட்டளை நிர்வாகிகள் பழ.தாமரைக்கண்ணன், கோ. ஜெகன் ,சி .பு .கோபிநாத் ,தடா தஷ்ணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் இராஜகுழந்தை வேலனர் ,நடுநாட்டு சொல் அகராதி ஆய்வறிஞர் கண்மணி குணசேகரன், முனைவர் வி .மகாலட்சுமி ,ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள்.
தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை மற்றும் பொதுக்கூட்டத்தில் அறக்கட்டளை நிறுவனர் தமிழின போராளி மருத்துவர். டாக்டர். இராமதாஸ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார். இந்த நிகழ்வில் பு.தா. அருள்மொழி, ரா. கோவிந்தசாமி, ச. சிவப்பிரகாசம் ,பேராசிரியர் விஷ்ணுதாசன், மா .கோமதி ,இரா .ராதாகிருஷ்ணன் ,சா .ராஜதுரை ,காரை .பழ. ஆறுமுகம் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த அறிஞர்கள் நம். கார்மேக வண்ணன் ,கடல் .நாகராஜன், ஓவியர் க.ரமேஷ், டாக்டர்.தி.இராஜமஜேந்திர சோழன் ,அமலநாயகம், பார். ஜெயச்சந்திரன் ,பா .மோ .பாஸ்கரன் ,இரா .மாரிமுத்து ,குறிஞ்சி. இரவி தமிழ் ஆசிரியர் தங்கவேலு ,மணிகண்ட பிரபு ,மலர் தாசன், பாரதி ,கலியமூர்த்தி அமலநாயகம், கருணா,கரன் ,ராம ஜெகதீசன் ,அருள்ஜோதி, வேல்முருகன், தியாகராஜன் ,ராஜா ,செல்வராஜ் ,ராமச்சந்திரன் ,ராசா ஆறு இளங்கோவன், இரா. ,சஞ்சீவிராயர் ,இரா .ஆனந்த் ,சிவ ,மார்த்தாண்டன் ,கார்த்திகேயன், சுந்தர் ,அகிலன் ,செல்வநாதன் ,ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை அறக்கட்டளையின் நிர்வாகிகள் போஸ் .இராமச்சந்திரன் ,பி .ஆர். பி .வெங்கடேசன் ,வீர .பால்ராஜ் ,ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த தமிழ் அறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment