பரவனாற்றில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொத்தவாச்சேரி ஊராட்சியில் கீழ் பரவனாறு பகுதியில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் கனிமவள நிதியின் மூலம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள ப்படுகிறது இந்த வெள்ள தடுப்பு பணியினை கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார் முதற்கட்டமாக கீழ் பரவனாற்றில் முதல் ஏழு கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு ஆற்றை தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும் தேவையான இடங்களில் 90 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கவும் தேவையான 17 இடங்களில் பெரிய மற்றும் சிறிய கான்கிரீட் வடிகால் மதகுகள் அமைக்கவும் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் மழை வெள்ளத்தின் பொழுது கீழ் பரவனாற்றில் ஆற்றின் இருபுறமும் உள்ள 26 கிராமங்கள் சுமார் 15000 ஏக்கர் விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திமுக ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment