திட்டக்குடி அடுத்த கோரக்கவாடி, கீழக்கரை பூண்டி, அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கல்வியும் மருத்துவமும் இரு கண்களாக தமிழக அரசு செயல்படுவதாக கூறினார். அதற்கேற்ப தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் திட்டக்குடி அடுத்த கோரக்கவாடி அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த கட்டடங்களும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 32 இலட்சம் செலவில் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலோடு மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் KNT. சுகுணாசங்கர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. கொரக்கவாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்,கிளைச் செயலாளர் ராமலிங்கம், வார்டு நம்பர் லட்சுமணபுரம் கிளை மணிவேல் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து கீழக்கல்பூண்டி 32 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கீழக்கல்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளை நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றனர். மங்களூர் வட்டாரக்கல்வி அலுவலர் ,மங்களூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கலைச்செல்வி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், துணைத்தலைவர் , பள்ளி ஆசிரியர்கள் ,மாணவர்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment