கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் உர மானியம், 100 நாள் வேலைத்திட்டத்தில், பி எம் கிஷான் திட்டத்தில் விவசாயிகள் வெளியேற்றம் இன்னும் பல்வேறு கோரிக்கைகல் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் திட்டக்குடி அகில இந்திய தொழிற்சங்க வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க வட்ட செயலாளர் அரவிந்த் மற்றும் கிழைக்கழகத் தோழர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment