வடலூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 February 2023

வடலூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது

வடலூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது


கடலூர் மாவட்டம், வடலூர் நரிகுறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 37 இவர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தவர்களில் தொடர்புடையவராக இருந்துள்ளதாக கூறபடுகிறது.


இந்நிலையில் ஆனந்தனை கைது செய்து வடலூர் போலிசார் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


இவர் கொடுத்த தகவலின் பேரில் புவனகிரி அடுத்த கீரபாளையத்தை நறிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது நந்தினி தெரிவிக்கையில்  பெரியபட்டு மசூதி பகுதியில் பிச்சை எடுத்து வரும் பிரியா நடராஜன் தம்பதிகளின் குழந்தையை அவர்கள் பிரசவத்தின் போது உதவிகரமாக இருந்துள்ளார் அப்போது அந்த குழந்தையை அவர்கள் வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க இயலாமல் இருந்துள்ளனர்.


இந்நிலையில் நந்தினியிடம் ஏழு நாளே ஆன ஆண் குழந்தையை விற்ப்பதற்க்காக கொடுத்துள்ளனர். அதனை அடுத்து நந்தினி வடலூர் நரிகுறவர் காலனியை சேர்ந்த தனது உறவினரான ஆனந்தனிடம் குழந்தையை விற்ப்பதற்க்காக கொடுத்துள்ளார்.


நந்தினி கொடுத்த ஆண் குழந்தையை ஆனந்தன் வடலூர் பகுதியில் சித்தமருத்துவம் செய்து வரும் மெகருன்னாஷாவிடம் ஒரு இலட்சத்து என்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.


குழந்தையை வாங்கிய மெகருன்னிஷா வடலூர் ரைஸ்மில் பகுதியை சேர்ந்த சுடர்விழியிடம்  மூன்று இலட்சத்திற்கு விற்பனை செய்ததாக  போலிசார் நடத்திய விசாரணையில் தெரியவருகிறது.


இந்த குழந்தை விற்பனை வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஒரு ஆண் கைது செய்யபட்ட நிலையில் மேலும் 

தற்போது ஆனந்தன் மற்றும் நந்தினி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வடலூர் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் தலைமறைவாக உள்ள குழந்தையின் பெற்றோர்களான பிரியா நடராஜன் தம்பதியினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/