நீர் தேக்க தொட்டியில் இருந்து சடலம் - அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் ஆய்வு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

நீர் தேக்க தொட்டியில் இருந்து சடலம் - அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் ஆய்வு!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது - 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என அவரை தேடி வந்த நிலையில் அவர் அந்த கிராமத்தில் இருந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து சடலம்மாக மீட்கப்பட்டார்.


இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு  தகவல் அளித்ததின் பெயரில், தீயணைப்பு துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு,  தொட்டியில்  அழுகிய நிலையில் கிடக்கும் சடலத்தை, கயிறுகள் கட்டி மீட்டனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்


சடலமாக உள்ள சரவணக்குமார், நீர் தேக்க தொட்டியில் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது கொலை செய்யப்பட்டாரா...? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணகுமார் சடலமாக மீட்கப்பட்ட தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து அக்கிராம மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இந்தப் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை ராஜேந்திரபட்டினம் கிராமம் வந்த அமைச்சர் அங்கு தொடங்கப்பட்டுள்ள சிறப்பு காய்ச்சல் முகாமை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் சரவணகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறி விசாரணைக்கு தகுந்த முறையில் நடக்கும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் துறை விசாரணை செய்யும் என உறுதியளித்தார். 


பின்னர் சரவணக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நீர் திறக்க தொட்டியில் அருகே சென்ற அமைச்சர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நீர்தேக்க தொட்டியின் ஆபரேட்டராக பணிபுரியும் நபர்களை விசாரித்த அவர் தொட்டியை சரிவர பராமரிக்கப்படாதது குறித்து அவர்களை கண்டித்தார்.


பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் குடிநீர்  விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசின் சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். பொதுமக்கள் யாரும் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என தண்டோரா மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவதாக கூறினார். 


மேலும் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும், மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விரைவாக விசாரணை நடத்தி முடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் காலை மற்றும் மாலை  வேலைகளில் 5 டிராக்டர்கள் மூலம் கிராமம் முழுவதும் குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பு காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதும் கூறினார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பேசினார். மேலும் பழைய நீர்த்தேக்க தொட்டியை மற்றும் குழாய்களை அகற்றிவிட்டு புதிய தொட்டியும், குழாய்களும் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த கோரிக்கையின் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து புதிய நீர் தேக்கதொட்டி அமைக்கப்படும் எனவும் கூறினார்.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஆரோக்கியராஜ், விருத்தாசலம் சரக காவல் ஆய்வாளர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன், மங்கலம்பேட்டை மருத்துவ வட்டார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், கருவேப்பிலங்குறிச்சி பொறுப்பு மருத்துவர் சத்யராஜ், ராஜேந்திர பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் தனம்.சிவலிங்கம், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் பொறுப்பு ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி, ஊரக உதவி இயக்குநர் இன்பா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அமைச்சரின் ஆய்வின்போது உடன் இருந்தனர். 


மேலும் 100க்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் முகாம் இட்டுள்ளனர்

No comments:

Post a Comment

*/