விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக பெருவிழா : உள்ளூர் விடுமுறை - மதுபானக் கடைகளை மூடக்கோரி மனு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 February 2023

விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக பெருவிழா : உள்ளூர் விடுமுறை - மதுபானக் கடைகளை மூடக்கோரி மனு!!

விருத்தாசலம் காசிக்கு வீசம்அதிகம் விருதகாசி என்று பெயர் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக பெருவிழா நடைபெறுகிறது. 


அதன் அடிப்படையில் எதிர்வரும் 6.3.23 அன்று மணிமுத்தா நதிக்கரையில் மூதாதயர்களுக்கு திதி கொடுக்கும் தீர்த்தவாரி நடைபெரும் இதில் விருத்தாசலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 1லட்சம் மக்கள் கூடுவார்கள் எனவே அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க கோரியும், 


விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரி கோரியும்  முன் வைத்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் சார்பில் நகர செயலாளர் பி.ஜி.சேகர் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில்  சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர்செந்தில் குமார் அவர்களிடம்  மனு கொடுக்கப்பட்டது.

 

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் நகர தலைவர் கந்தசாமி, நகர து.செயலாளர் அய்யப்பன், நகர பொருளாளர், சோதிமுருகன், நகர அமைப்பு செயலாளர் பாலமுருகன், தங்கமணி முருகன், குமார் ,சந்தோஷ் ,சத்தியசீலன், மற்றும் வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/