கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்றுகாலை வெளியான தீர்ப்பை வரவேற்று சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழகச்செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் கூடிய அதிமுகவினர் வெடி வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
ஜூலை11-ல் கூட்டிய அதிமுகவின் பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களும் செல்லும் என உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் ஒன்று கூடி ராஜீவ் காந்தி சிலை அருகே வெடி வெடித்து பயணிகள், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் எஸ் கே நன்மாறன், அவைத் தலைவர் கோழி. கோவிந்தசாமி, துணைச் செயலாளர் சம்பத், பொருளாளர் ராமலிங்கம், மாவட்டப்பிரதிநிதிகள் தெய்வ.ராஜகுரு,பாலசுந்தரம், ரேவதி ஜெய்சங்கர் மற்றும் சர்புதீன், ஸ்ரீதர்,கோபால், பாலு, குணசேகரன், அஞ்சாபுலி, அண்ணா. பிரபாகரன், மதியழகன், சிவகுமார், கனகரத்தினம், மணிமாறன், ஜெயபால், பாலகுரு மற்றும்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment