கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிமுகவின் சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு கடைத் தெருவிலும், ராஜீவ் காந்தி சிலை அருகேயும் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து பூத்தூவி பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி அம்மாவின் புகழ் ஓங்குக,எம்ஜிஆர் புகழ் ஓங்குக, வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க என்ற கோஷத்துடன் அதிமுக நிர்வாகிகளும் கட்சியினரும் முழக்கமிட்டனர்.
புரட்சித்தலைவியின்இந்த75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே. நன்மாறன், அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, நகர துணைச் செயலாளர் சம்பத்,நகரப் பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி தெய்வ. ராஜகுரு, ரேவதிஜெய்சங்கர் மற்றும் சர்புதீன், ஸ்ரீதர், குணசேகரன், அஞ்சாபுலி, மதியழகன், கோபால், அண்ணா பிரபாகரன், ஜபருல்லா, சிவக்குமார்,திலீபன், விஸ்வநாதன், ராஜகோபால்,சுரேஷ் மற்றும் அதிமுககட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment