நெல் கொள்முதல் நிலையத்தில் ₹25 ஆயிரம் பணம் பெற்றதாக இருவர்கைது. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 February 2023

நெல் கொள்முதல் நிலையத்தில் ₹25 ஆயிரம் பணம் பெற்றதாக இருவர்கைது. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை.

நெல் கொள்முதல் நிலையத்தில் ₹25 ஆயிரம்  பணம் பெற்றதாக இருவர்கைது. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை.


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரகுமான் என்பவர் பட்டியல் எழுத்தராகவும் தியாகராஜன் என்பவர் மேஸ்திரியாகவும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் தனது வயலில் விளைந்த 450 மூட்டைநெல்லை போடுவதற்காக கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். 



அப்போது அங்கிருந்தவர்கள் மூட்டை ஒன்றிற்கு 55 ரூபாய் என்ற கணக்குப்படி மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு சம்மதித்த முகுந்தன் என்பவர் இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர்


முகுந்தன், மேஸ்திரியிடம் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். லஞ்சப்பணம் பெற்றது தொடர்பாக நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ரகுமான், மேஸ்திரி தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சிதம்பரம் மண்டல அலுவலகத்தில் வைத்து இதுவரை எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/