கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பாஜக சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எதையும் சரிவர செய்து தராமல் நகராட்சி நிர்வாகத்தினை சீர்குலைத்து கொண்டிருக்கும் நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பஸ் நிலையம் முன்பு திட்டக்குடி நகரத் தலைவர் செல்வ.பூமிநாதன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆணையர் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாகவும், 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மூன்று மாதத்திற்குள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர் நகராட்சியாக மாறியும் எந்த ஒரு முன்னேற்றமும் திட்டக்குடி நகரத்தில் இல்லை.
24 வார்டுகளில் சுடுகாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,சாக்கடை, சாலை பொதுமக்கள் கழிப்பிடம் உடனடியாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் K. மருதை அவர்களின் வழிகாட்டுதலோடு, மாவட்ட பொதுச் செயலாளர் APR.ரெங்கராஜன், உடன் மாவட்ட செயலாளர் மா.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார், தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் போன். பெரியசாமி மாநில பொது உறுப்பினர் நரேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வமணி விவசாய அணி சக்திவேல் மாவட்ட செயலாளர் கூட்டுறவு பிரிவு, கோவில் ஆன்மீக பிரிவு மாவட்டத் தலைவர் வேல்முருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அண்ணாதுரை,லக்கூர் ஒன்றிய கவுன்சிலர் பொன் கொளஞ்சி, தவமணி,பூமிநாதன் கருப்பையா, ராஜகுரு பழனிவேல், சிங்காரம் ராமச்சந்திரன், சிவா, மணிவண்ணன், முல்லைநாதன், ராமு, அய்யாக்கண்ணு, கார்த்திக் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment