நல்லூர் ஸ்ரீவில்வவனேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவிற்கான ஓடு பிரிக்கும் முகூர்த்தம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 February 2023

நல்லூர் ஸ்ரீவில்வவனேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவிற்கான ஓடு பிரிக்கும் முகூர்த்தம்

நல்லூர் ஸ்ரீவில்வவனேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவிற்கான ஓடு பிரிக்கும் முகூர்த்தம்  


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் மணிமுத்தாறு மற்றும் கோமுகி ஆறுக்கும் நடுவில் மிகவும் பிரசித்தி ஸ்ரீவில்வவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது


இத்திருக்கோவிலில் வருடந்தோறும் மாசிமகத் திருவிழா நடைபெறும்  அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மாத திருவிழா பிப்ரவரி 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, முக்கிய திருவிழாவாக மார்ச் 2- ந் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் மார்ச் 5- ந் தேதி திருத்தேர் வீதியுலாவும், மார்ச் 6- ந் தேதி மாசிமக பெருவிழாவில் மரிக்கொழுந்து பந்தலில் அனைத்து நல்லநாயகர், நல்ல நாயகி உடனுறை பிரஹந்தநாயகி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளும் திருவீதியுலாவும் நடைபெறும் 


இத்திருவிழாவிற்கான முகூர்த்தம் மற்றும் தேர் ஓடு பிரிக்கும் சம்பிரதாய நிகழ்வு பிப்ரவரி 4- ந் தேதி காலையில் நல்லூர் கடைவீதியில் நிலை கொண்டுள்ள தேர் அருகே நடைபெற்றது


அப்போது நல்லூர் மற்றும் சுற்று வட்டார முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருக்கோவிலின் பரம்பரை அர்ச்சகர் சாம்பசிவம் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து ஓடு பிரிக்கும் முக்கிய நிகழ்ச்சிக்கான முகூர்த்தம் நடைபெற்றது

No comments:

Post a Comment