கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த ஐவதகுடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றொருவர் காயமடைந்தார்
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருள் (வயது 54) , இவரும் சிறுமுளை சேர்ந்த சின்னையன் மகன் செல்வராஜ் (வயது 60) என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டிஎண், 31, பிடி, 9209 என்ற எண்ணுள்ள டிவிஎஸ், எக்ஸ் எல், வாகனத்தில் ஐவதகுடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து - திருச்சி நோக்கி சென்ற டிஎண்,61, எல், 5572 , என்ற. எண்ணுள்ள மாருதி ஆல்ட்டோ கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், படுகாயமடைந்த செல்வராஜ் வேப்பூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்த அருள் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
No comments:
Post a Comment