கடலூர் மாவட்டம் வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது 152-ஆவது ஆண்டு தைபூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெற இருக்கிறது.
அதனை இன்று தைபூச திருவிழா திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டன. அதனை தொடர்ந்து 7.30 மணி அளவில் தர்மசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, அவர் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன.
பின்னர், வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடியபடி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நாளை தைப்பூச திருவிழாவான (ஞாயிற்று கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 6-ஆம் தேதி (திங்கள் கிழமை) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காட்டபடுகிறது.
பின்னர் 7--ந்தேதி செவ்வாய் கிழமை மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
சென்னை, கும்பகோணம், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment