குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு தினம் அனுசரிப்பு
வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட குடிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு தினம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி சிலையிலிருந்து தொடங்கி ராஜவீதி எல்லைக்கல் வீதி வழியாக மவுன ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் மௌன அஞ்சலியிம் செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பொறியாளர் V.சிவகுமார் அவர்களும் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment