நெய்வேலியில் தமிழ்நாடு தையல் கலைஞர் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்த்தின் கொடியேற்று விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 February 2023

நெய்வேலியில் தமிழ்நாடு தையல் கலைஞர் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்த்தின் கொடியேற்று விழா

தமிழ்நாடு தையல் கலைஞர் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்த்தின் கொடியேற்று விழா நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தையல் கலைஞர் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க வடக்குத்து கிளை சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட தலைவர் T.வைரக்கண்ணு அவர்கள் சங்க கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் C.D ஆனந்தன் கூறுகையில்  தையல் கலைஞர்களை பாதுகாக்கவும் அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கிடைக்கப் பெற இதுசங்கம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும்


தற்பொழுது ரெடிமேட் ஆடைகள் அதிக அளவில் பொதுமக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருவதால் தையல் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் தைப்பதற்கான ஆர்டர்கள் எங்களுக்கு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்


மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் வாடகை கடை நடத்தி வரும் எங்களுக்கு கடை வாடகை கூட கட்ட முடியாத சூழல் நிலவி வருவதால் தையல் கலைஞர்களின் நலம் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் 


தமிழக அரசு தையல் கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகை விலை மின் கட்டணம், நலத்திட்ட உதவிகள் தையல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் தற்போது வழங்கிட முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 



நிகழ்ச்சியில் மாநில பிரதிநிதி K. சக்திவேல் கிளைத் தலைவர் A.குமார் கிளை செயலாளர் C.மணிவேல் கிளை பொருளாளர் அரசி துணைத் தலைவர்கள் மாயவேல் பாலமுருகன் சிறப்பு தலைவர் வெண்ணிலா பாலாஜி துணைச் செயலாளர்கள் A.கோவிந்தன் பரமேஸ்வரி எத்திராஜ் துளசி ராசன் ராஜாராம் கோகிலா வடக்குத்து வர்த்தக சங்க செயலாளர் சேகர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/