சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் விருத்தாச்சலம் சாலை விரிவாக்க பணியில் முறைகேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 02-2-2023 இன்று சாலை மறியல் போராட்டம் நகர அமைப்பாளர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் நடைபெற இருந்தது காவல்துறை தலையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பத்து நாட்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் தருவதாகவும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் வட்டச் செயலாளர் அசோகன் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன் வட்டக்குழு உறுப்பினர்கள் எம் ஜெ. நெல்சன் விவசாய சங்க வட்ட செயலாளர் செல்வகுமார் வாலிபர் சங்க விருதை ஒன்றிய செயலாளர் பரமசிவம் மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி நகர் குழு உறுப்பினர்கள் எல்.ஐ.சி.கணேசன், செந்தில், சேகர், சத்யா,வேல்முருகன் கிளை செயலாளர்கள் வீரமணி, வேலன், சட்டநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment