கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் கட்டிடத்தில் மதுபான கடை அண்மையில் திறக்கப்பட்டது.
இதனை கண்டித்து இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலமையில் தனியார் மதுபான கடையை அகற்றக் கோரி சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்திரா நகர் பகுதி மதுபானம் இல்லாத பகுதியாக அறிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கடைப்பிடிக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மார்க் நிர்வாகம்
உடனடியாக தனியார் மதுபான கடைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
மேலும் குடியிருப்பு பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் கடை திறக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் பல ஏற்படுவதோடு பொதுமக்களும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
No comments:
Post a Comment