கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் புது தெருவில் ஆண்டிமடம் செல்லும் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று பகுதியிலே இருக்கிறது இந்த நிலையில் அந்த ஆலமரம் தற்பொழுது கடந்த ஒரு வார காலமாக மர்மமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீய அணைத்தனர். இருந்தபோதிலும் தீ அணியாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி முழுவதும் குடிசை வீடுகளாகவும் இருக்கிறது மேலும் ஆலமரம் விழுது கிளைகள் தெருக்கள் ஓரம் செல்வதால் இரவு நேரங்களில் அதிக அளவில் தீ பிடித்து வீடுகள் தீயில் எரிந்து விடுமோ என்ற நிலை பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருகளுக்கு வரும் ஆல மரக்கிளையை வெட்டி அகற்றிவிட்டு நிரந்தரமாக தீயணை அணைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தற்போது கிராம மக்கள் அருகில் உள்ள வீடுகளில் தீ பற்றி விடுமோ என அச்சத்தில் மரத்திலிருந்து ஓட்டைகளை செம்மண்ணால் அடைத்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment