தொழுதூரில் ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.இம் முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம்,தோல் மருத்துவம், மகளிர் மருத்துவம் குழந்தைகள் மருத்துவம் போன்ற அனைத்து நோய் வகை இலவச மருத்துவ பரிசோதனை மருத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது முகாமிற்கு அனைவரையும் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களின் முதல்வர் சண்முகப்பிரியா வரவேற்றார். விழாவிற்கு முன்னிலையாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர். புனித தேவகுமார், Dr.A.R.தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு இம் முகாமை ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் நிறுவனத் தலைவர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாம்மில் டாக்டர் ராஜகோபாலன், டாக்டர். அஜித்குமார் ,டாக்டர் பிரகாஷ்,டாக்டர் ஆனந்தி ஆகிய மருத்துவகுழுவினர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர் மேலும் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் இலவச ரத்த பரிசோதனை சக்கரை வியாதிக்கான பரிசோதனை கண்டறிதல் மற்றும் மருத்துவ ஆலோசனை& உணவு முறைகள் வழங்கினார். மேலும் இம் முகாம்பில் ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் குழுவினர்கள்,சாய் அப்போலோ மேலாளர் செல்வகுமார் கலைச்செல்வன் சுப்பிரமணியன் சுபாஷினி,சரிதாசூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெய் கணேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment