புவனகிரி அருகே ஆதி திராவிட மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி புவனகிரி வட்டாட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 February 2023

புவனகிரி அருகே ஆதி திராவிட மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி புவனகிரி வட்டாட்சியரிடம் மனு.

புவனகிரி அருகே  நத்தமேடு கிராமம் ஆதி திராவிட  மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி புவனகிரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். 



கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம்        மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட  மக்கள் புவனகிரி வட்டாட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர் நத்தமேடு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்ற இந்த ஊராட்சியில் இட நெருக்கடியில்  ஒரே வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு குடியிருப்பிற்கு போதிய இடவசதி இல்லாததால் பல  ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து இருந்தனர் அதன் அடிப்படையில் இந்த ஊராட்சியில்  ஆதிதிராவிட  மக்களுக்கு என்று இடம்  ஒதுக்கீடு செய்து மனைகள் அளவீடு செய்யப்பட்டது. 



ஆனால் அந்த மனைகளை இந்த மக்களுக்கு இதுவரை பிரித்துக் கொடுக்கவில்லை இதனால் இட நெருக்கடியில் வாழ முடியாமல் தவித்து வந்தனர் சமீபத்தில் அந்த இடத்தை வேறு ஊராட்சியைச் சேர்ந்த மக்களுக்கு கொடுக்கப் போவதாக நத்தமேடு கிராம ஆதிதிராவிட மக்கள் அறிந்தனர் இதனால் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த வீட்டுமனைகளை எங்கள் ஊரைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று  புவனகிரி வட்டாட்சியரிடம் நத்தமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜீ. ரவிச்சந்திரன் தலைமையிலும் புவனகிரி ஒன்றியம் விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒன்றிய   விவசாய அணி செயலாளர்   தா.சுதாகர் முன்னிலையிலும் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். 



வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாமல் வேறு பணிக்கு சென்று இருந்ததால் துணை வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர் அவர்களிடம் எங்கள் கிராமத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த வீட்டு மனைகளை எங்கள் பகுதியைச் சேர்ந்த இட நெருக்கடியில் வாழ்கின்ற ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் உடன்  நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் வருகை தந்து மனு அளித்தனர்


No comments:

Post a Comment

*/