கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிகுட்பட்ட டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் குபேந்திரன் ஆலோசனையின் பேரில் மாவட்ட உதவி இயக்குனர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற முகாமில் வீட்டு வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகளான நாய் பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனைகளை அழைத்து வந்து எடைபார்க்கப்பட்டு, நோயின் தன்மை குறித்தும், பராமரிப்பு குறித்தும் விலங்குகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் கொண்டு வந்த செல்ல பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது...இதில் கால்நடை பராமரிப்பு உதவி மருத்துவர்கள் சரவணன், நந்தகுமார், வேல்முருகன், தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சரண்யா, கோமகன், கிருபாகர் , ஆனந்தராஜ், வசந்த், பூவராகமூர்த்தி மற்றும் மண்டல தலைவர் செல்வராஜ், மாவட்ட தலைவர்கள் ஆனந்தன், ராமரத்தினம், ராமு மற்றும் சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment