கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு எதிரான மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பின்பு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன
நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க வட்ட தலைவர் தனபால் விவசாய தொழிலாளர் சங்க குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் வட்டக்குழு கே எஸ் வெங்கடேசன் ஆனந்த வீரன் கே பி குமார் நாகப்பன் பாண்டியன் வாலிபர் சங்க வட்ட பொருளாலர் ஆகாஷ் செல்வராசு ஷாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment