கடலூர் மாவட்டம் வடலூரில் குழந்தை கடத்தி ரூ3.50 லட்சத்திற்கு விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்
வடலூரை பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் மனைவி சுடர்விழி (37)இவர் தனது அக்கா சுதாவின் வீட்டுக்காரான புதுச்சத்திரம் பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதனிடம் கூறுகையில் தன்னிடம் ஒரு குழந்தை உள்ளதாகவும் அதற்கு ,பிறப்புச் சான்றிதழ் வேண்டும் எனக் தெரிவித்துள்ளார் பின்னர் விஸ்வநாதன் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற பல வகையில் முயற்சி செய்தும் பிறப்பு சான்று கிடைக்காததால்,.
இந்த குழந்தையை வைத்திருந்தால் நீ வழக்கில் சிக்கி விடுவாய் அதனால் குழந்தையை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் கொடுத்து விடலாம் எனக் தெரிவித்தாக கூறப்படுகிறது
பின்னர் விஸ்வநாதன் கடலூர் கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட குழைந்தகள் நல அலுவலரிடம், குழந்தையை தொட்டில் சேர்ப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஸ்வநாதன் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிக்கவே, சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சத்திரம் போலீசார் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் தனது மனைவியின் தங்கை வடலூர் ரைஸ்மில் தெருவில் வசிக்கும் அருள்முருகன் என்பவரின் மனைவி சுடர்விழியிடம் குழந்தை உள்ளது எனக் கூறியுள்ளார். உடன் வடலூர் சென்ற போலீசார் சுடர்விழியிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 2022ம் வருடம் டிசம்பர் மாதம் 13ம் தேதி வடலூர் தனியார் பள்ளி அருகே கோட்டக்கரை பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசாவிடம் ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து இந்த குழந்தையை வாங்கியதாக கூறியுள்ளார் .
உடன் போலீசார் மருத்துவர் மெகருன்னிசாவை கைது செய்து விசாரணை நடத்தியதில்அவர் மீது 2017 ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இதேபோல் ஒரு குழந்தை கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது ,இதே போல் அவர் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஷீலா, சீர்காழி சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து இதற்கு முன்பு மூன்று குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார், வடலூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஷபான் என்பவரின் மகள் மெகருன்னிசா (67)அருள்முருகன் மனைவி சுடர்விழி (37) சீர்காழி சட்டநாதபுரம் செல்லக்குட்டி மகன் ஆனந்தன் (47)கீரப்பாளையம் ஜே, ஜே நகர் சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37)ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் போலீசார் நடத்தி விசாரணையில் இந்த குழந்தையை மெகருன்னிசா வடலூர் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் வாங்கியதாகவும், ஆனந்த் கீரப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த ஒரு பெண்ணிடம் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment