விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை போட்டு, விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உடல் நலம் பெற வேண்டி 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மண் சோறு உண்டு சாமி தரிசனம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் செல்லும் சாலையில் உள்ள அருள்மிகு ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, மாலை போட்டு,இருமுடி கட்டிக் கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக,இரண்டு வருடத்திற்கு பிறகு,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் மண் சோறு உண்ணும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முன்னதாக, அருள்மிகு ஜெகமுத்துமாரியம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அருள்மிகு ஜெக முத்துமாரியம்மன் காட்சியளிக்க மேளதாளத்துடன் ,ஊர்வலமாக வந்த பக்தர்கள் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வளாகத்திற்கு வந்தடைந்தனர்.
பிறகு, அருள்மிகு ஜெகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு,மண் சோறு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட சமயபுரம் செல்லும் பக்தர்கள் பங்கேற்று, திருமணம் பாக்கியம்,குழந்தை பாக்கியம்,உடல் நலம் பெற வேண்டி மண்சோறு உண்டு அருள்மிகு ஜெகமுத்து மாரியம்மன் வழிபட்டனர்.மேலும், வருகிற சனிக்கிழமை அன்று மாலை போட்டுக்கொண்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று,அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வழிபட உள்ளனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை ஜெக முத்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் பாலு ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment