கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உமாராணி இருந்து வருகிறார். இவர் ஊராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதில்லை எனவும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
இதனால் ஊராட்சியில் அனைத்து பணிகளும் பாதிப்பு அடைகிறது.எந்த செலவின கணக்கு வழக்குகளிலும் வெளிப்படுத்தன்மையாக நடக்கவில்லை. துணைத் தலைவர் உள்ளிட்ட தங்களை எந்த ஒரு விஷயத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறி ஜெயங்கொண்டான் ஊராட்சியின் துணைத் தலைவர் திருஞானகுருசாமி, வார்டு கவுன்சிலர்கள் மங்கலட்சுமி, பாரதி சீலன், கற்பகம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துணைத் தலைவர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் தெரிவிக்கும் போது ஊராட்சியில் நடக்கும் பல்வேறு பணிகளில் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஊராட்சியில் அடிப்படை பணிகளை செய்து வரும் ஊராட்சியின் பல்வேறு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலை இருந்து வருகிறது. இதனால் பலரும் சொல்லமுடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர்.அதுபோல் நாங்களும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் பொருத்து பொருத்து பார்த்துவிட்டு ,வேதனையின் உச்சத்தில் தான் இந்த முடிவை எடுத்து ஜெயங்கொண்டான் ஊராட்சியின் துணைத் தலைவர் மற்றும் மூன்று வார்டு கவுன்சிலர்கள் என சேர்த்து நாங்கள் நான்கு பேரும் எங்களது ராஜினாமா கடிதத்தை புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். எங்களது முடிவில் எந்த விதமான மாற்றமும் இல்லை. எங்களது ஊராட்சிக்கு நல்ல வளர்ச்சி திட்ட பணிகளை செய்து கொடுத்தால் போதும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவித்தனர்., வார்டு கவுன்சிலர்கள் மங்கலட்சுமி, பாரதி சீலன், கற்பகம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துணைத் தலைவர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் தெரிவிக்கும் போது ஊராட்சியில் நடக்கும் பல்வேறு பணிகளில் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஊராட்சியில் அடிப்படை பணிகளை செய்து வரும் ஊராட்சியின் பல்வேறு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலை இருந்து வருகிறது. இதனால் பலரும் சொல்லமுடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர்.அதுபோல் நாங்களும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் பொருத்து பொருத்து பார்த்துவிட்டு ,வேதனையின் உச்சத்தில் தான் இந்த முடிவை எடுத்து ஜெயங்கொண்டான் ஊராட்சியின் துணைத் தலைவர் மற்றும் மூன்று வார்டு கவுன்சிலர்கள் என சேர்த்து நாங்கள் நான்கு பேரும் எங்களது ராஜினாமா கடிதத்தை புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். எங்களது முடிவில் எந்த விதமான மாற்றமும் இல்லை. எங்களது ஊராட்சிக்கு நல்ல வளர்ச்சி திட்ட பணிகளை செய்து கொடுத்தால் போதும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment