வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152-வது ஆண்டு தைப்பூச திருவிழாவில் ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக பல்லாக்கில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மதியம் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது இதில் ஆயிரகணக்கான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர் பக்தர்களின் வசதிக்காக வடலூர் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேட்டுக்குப்பம் பகுதியில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment