நல்லூர் ஒன்றிய கேந்திர பொருப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேப்பூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது
கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மற்றும் கேந்திர பொருப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் , கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் வேப்பூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் வினோத் பி, செல்வம் கலந்து கொண்டு கேந்திர பொருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கடலூர் நாடளுமன்ற தொகுதியை பாஜக வேட்பாளர் வெற்றி பெற வைக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் கட்சி பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
அதனை தொடர்ந்து கட்சி கூட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கிளை பொருப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment