வடலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை அறிவிப்பின்படி 200 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.
கடலூர் மாவட்டம் வடலூரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி உயிர்க்குலம் எல்லாம் ஒன்றென கருதி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமான் இவ் வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கமும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152- வது ஆண்டும் சேர்த்து முப்பெரும் விழாவாக சத்திய ஞான சபை பெருவெளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் முன்னிலை வகித்தனர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து சன்மார்க்க சான்றோர்களுக்கும் அரசு பள்ளி மாணவர் மாணவிகளுக்கும் பாராற்றுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கடலூர் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளருமான பொறியாளர் வி சிவகுமார் வட்டாட்சியர் சுரேஷ்குமார் வடலூர் நகர மன்றத் தலைவர் சு.சிவக்குமார் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் விழா குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி ஆணையர் ஆர்.சந்திரன் அவர்கள் நன்றியுரையாற்றினார்
No comments:
Post a Comment