இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து கணவன் மனைவி காயம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து கணவன் மனைவி காயம்

என், நாரையூர் பஸ் நிறுத்தம் ஓரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து கணவன் மனைவி காயம்


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த என், நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியதில்  கணவன் மனைவி காயமடைந்தனர்  



சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் பிரபாகரன் வயது 23, என்பவர் தனது மனைவி மற்றும்  குழந்தைகளுடன் டிஎண் 91, வி,1792 என்ற எண்ணுள்ள  இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் நோக்கி சென்ற என், நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே தங்களது  வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு  குழந்தைக்கு  சாப்பாடு ஊட்டி கொண்டிருநவதனர் 


அப்போது எதிர் திசையில் டிஎண் 15 எம்ஏ, 5276 என்ற எண்ணுள்ள காரை ஓட்டி வந்த. வேப்பூர் தாலுகா, மலையனூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் பிரகாஸ் வயது 36 என்பவர்   காரை ஓட்டி வரும்போது தூங்கிவிட்டதால்  இவரது கார்  சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த  இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில்  விழுந்து விட்டது 


இந்த விபத்தில் பிரபாகரனுக்கும்  அவரது மனைவிக்கும்    காயங்கள் ஏற்பட்டது இருவரையும் அவ்வழியே வந்தவர்கள்  மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைகாக பெரம்பலூர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கபட்டனர்


இது குறித்து வேப்பூர் போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment

*/