கடலூர் மாவட்டம் ஆவட்டி மதுபான கடையில் பணியாற்றும் தி.இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் அரசு மதுபான கடையில் மேனேஜராக உள்ளார்.
கடையில் விற்பனையாளராக தொளார் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் மற்றும் ஏழுமலை, A.பாண்டியன் ஆகியோர்கள் மதுபான கடையில் விற்பனையாளராக பணி செய்கின்றனர்.
கடந்த மாதம் 2022 ஆண்டு வீரபாண்டியன் பணியில் இருந்த போது 7,90,000 ரூபாய் மது விற்பனையான பணத்தை எடுத்து சொந்த செலவு செய்துள்ளார்.
இதில் 7 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை வீரபாண்டியன் சொந்த செலவிற்கு எடுத்து செலவு செய்துள்ளார்,
அரசு மதுபான கடை (2628) மேனேஜர் அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை பாண்டியன் மற்றவர்களிடம் இருந்து வாங்கி 07.03.2022 தேதி அன்று வட்டிக்கு பணம் வாங்கி 3 லட்சமும் ரூபாய் மற்றும் 14.3.2022 அன்று 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வீரபாண்டியிடம் (மொத்தம்) 7.90.000 ரூபாய் ஆவட்டி டாஸ்மார்க் கடையில் வட்டிக்கு வாங்கிய பணத்தை அங்கு பணியாற்றும் ஏழுமலையின் முன் வீரபாண்டியிடம் கொடுத்துள்ளார்.
இப்பொழுது பணத்தை திரும்பி கேட்டால் தர முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் இதனால் மனம் உடைந்து மேலாளர் பாண்டியன் ராமநத்தம் காவல் நிலையத்தில் விற்பனையாளர் வீரபாண்டியன் மீது புகார் அளித்துள்ளார் ,
ராமநத்தம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment