புவனகிரி அருகே மருதூர் மற்றும் பு.கொளக்குடி ஊராட்சியில் அதிமுக சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75. வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் ஜெயங்கொண்டான். எல்லக்குடி பு.கொளக்குடிஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75. ஆவது பிறந்தநாள் விழாவை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஆ. அருண்மொழிதேவன் அவர்களின் ஆணைக்கிணங்க புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் புவனகிரி மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் இ.ஜீ. பிரித்திவி முன்னிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.செங்குட்டுவன் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு காலை சிற்றுண்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு .பேனா புத்தகங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment