விருத்தாசலத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு jci viruthachalam five towers கிளை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளை இயக்கத்தின் தலைவர் முரளி தலைமை வகித்தார். SMA மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், முன்னிலை வகித்தார்.
காவல்துறை ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கருணா அவர்கள் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
விழாவில் பொருளாளர் Jசுரேஷ், PRO ஜெயபாலன், துணைத் தலைவர்கள் குபேந்திரன், .ராஜேஷ், சேவியர், இயக்குனர் விஜய், இணை செயலாளர் ராஜசேகரன்,ராஜேஷ், பஷீர், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment