ராமநத்தம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

ராமநத்தம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநத்தம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



கடலூர் மாவட்டம் ராமநத்தம் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்(வாட்டர் டேங்க்)  மனித மலத்தை கலந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் மேற்கு  ஒன்றிய செயலாளர் சி. சஞ்சய் காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, ஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ், ஒன்றிய அமைப்பாளர் கலியமூர்த்தி, கண்டன சிறப்பு உரையாற்ற வந்திருந்த கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்  தாமரைச்செல்வன், மாநில துணைச் செயலாளர் பெருவழதி,மாவட்ட செயலாளர் பொறுப்பு மருதமுத்து, மாநில துணை செயலாளர் கணேசன், மாநில துணைச் செயலாளர் சரஸ்வதி, மாநில துணைச் செயலாளராக ராஜ்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/