விருத்தாசலத்தில் JCI Virudhachalam Five Tower கிளை இயக்கத்தின் சார்பாக டேனிஷ் மிஷன் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

விருத்தாசலத்தில் JCI Virudhachalam Five Tower கிளை இயக்கத்தின் சார்பாக டேனிஷ் மிஷன் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல்

விருத்தாசலத்தில் JCI Virudhachalam Five Tower கிளை இயக்கத்தின் சார்பாக  டேனிஷ் மிஷன் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.


விழாவிற்கு கிளை இயக்கத்தின் தலைவர்  முரளி தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பள்ளியின் தலைமை ஆசிரியர் கிடியன் எபினேசர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருச்சபையின் கல்வி வாரிய ஆலோசக உறுப்பினர் டேவிட் லாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட  மாணவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள்  பொங்கல் வைத்து கும்மி பாட்டு பாடியும் நடனமாடியும் மகிழ்ந்தனர்.


நிகழ்வில் முன்னாள் மண்டல இயக்குனர் மணிவண்ணன்,  சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், பொருளாளர் சுரேஷ்  துணைத் தலைவர்கள் குபேந்திரன், சதீஸ்வரன்,  வேல்முருகன், சேவியர், இயக்குனர் விஜய், இணைச்செயலாளர் ராஜசேகரன், உறுப்பினர்கள் பஷீர்,  சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/