பரங்கிப்பேட்டை அருகே தர்மம் செய்வோம் குழுமம் நடத்தி வரும் உழைப்பாளர்களுக்கான 20 ரூபாய் பிரியாணி கடை மூன்றாம் ஆண்டு துவக்க விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

பரங்கிப்பேட்டை அருகே தர்மம் செய்வோம் குழுமம் நடத்தி வரும் உழைப்பாளர்களுக்கான 20 ரூபாய் பிரியாணி கடை மூன்றாம் ஆண்டு துவக்க விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அருகே தர்மம் செய்வோம் குழுமம் நடத்தி வரும் உழைப்பாளர்களுக்கான 20 ரூபாய் பிரியாணி கடை மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது,


இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் K.தேன்மொழி சங்கர் மற்றும் துணைத் தலைவர் M.S.முகமது யூனுஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா பிரியாணி வழங்கப்பட்டது, 


நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி G.சங்கர், திமுக நகர செயலாளர் A.R.முனவர் உசேன், சமூக ஆர்வலர்கள் பூராசாமி ,பசுமை ஹாஜி ,OQAAB நிஜாம், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கினார்கள் 


நிகழ்ச்சியை தர்மம் செய்வோம் குழும தலைவர் தமீம்,செயலாளர் ஹாஜி அலி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்

 

செய்தியாளர் சாதிக் அலி

No comments:

Post a Comment

*/