GKL இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் திறப்பு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் மருங்கூரில் GKL IMPORTS AND EXPORTS திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழக மாற்றுத்திறனாளர்கள் தொண்டு நல சங்க மாநில தலைவர் குமார் அவர்களின் பரிந்துரையின் பெயரில் தவழ்ந்து செல்லும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் GKL இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் கோகுலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர வீல் சேர்களை வழங்கினார் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
நலத்திட்ட உதவிகளை வழங்க பரிந்துரை செய்த தமிழ்நாடு மாற்று திறனாளர்கள் தொண்டு நல சங்க தலைவர் குமார் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றியை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment