வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, கரூர் வங்கி மேலாளர் மனைவி பலி ஆறு பேர் காயம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 January 2023

வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, கரூர் வங்கி மேலாளர் மனைவி பலி ஆறு பேர் காயம்


வேப்பூர்  அருகே  இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து,  கரூர் வங்கி மேலாளர் மனைவி பலி ஆறு பேர் காயம்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானார் ஆறு பேர் காயமடைந்தனர். 


நாமக்கல்  மாவட்டம், தம்மம்பட்டி தாலுகா, முள்ளுக்குறிச்சி ஊராட்சி  முட்டுகாடு பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் வாசுதேவன் (வயது 39),இவர் கரூர் நகரத்திலுள்ள கரூர் வைஜ்யா வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 


இவர் தனது குடும்பத்தாருடன கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கை கிராமத்தில் உள்ள அவரது குடிதெய்வமான அய்யனார் கோவிலுக்கு சென்று  படையலிட்டு சாமிகும்பிட்டுள்ளனர்  


மாலை 5-30 மணியளவில் மீண்டும் ஹோண்டா ஐ20 காரில் தங்களது சொந்த ஊரான முள்ளுக்குறிச்சி நோக்கி வேப்பூரிலிருந்து கடலூர்  சென்றுகொண்டிருந்தனர் 


வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் ராசிபுரத்திலிருந்து வடலூர் சென்று கொண்டிருந்த டிஎண், 31,சிசி 5460 என்ற எண்ணுள்ள காரும் வாசுதேவன் ஓட்டி சென்ற காரும்  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 


இதில் காரை ஓட்டி சென்ற  வாசுதேவனுக்கு  தலையிலும், அவருடன்  காரில் பயணம் செய்த அவரது மனைவி அருணா மார்க்ரெட் (வயது -32) என்பவருக்கு தலையிலும், மகன்கள் பிரித்திகன் (வயது 10) தாடையிலும்,கவின்( வயது 8)இடது கையில் எலும்பு முறிவு,  வாசுதேவன் அம்மா அங்கம்மாள் (வயது -70), ஏன்பவருக்கு  மூச்சு திணறலும் ஏற்பட்டது. 


எதிரில் வந்த காரை ஓட்டி சென்ற வடலூர் பார்வதிபுரம் கந்தசாமி மகன் கார்த்திகேயன் (வயது 45) என்பவருக்கு கையில் வீக்கமும் அவரது மனைவி ராதிகா (வயது-42)என்பவருக்கு உதடு, இடது கை, தலை பகுதியிலும் காயம் ஏற்பட்டது காயம்பட்ட அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி வாசுதேவன் மனைவி அருணா மார்க்ரெட் இறந்து விட்டார் வாசுதேவன் அவரது மகன்கள் இருவரும் அம்மா உள்ளிட்ட நான்கு பேரும் மேல் சிகிச்சைகாக. சேலம் தனியார் மருத்துவ மனைக்கும், கார்த்திகேயன் அவரது மனைவி ராதிகா இருவரும் கடலூர் தனியார் மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்கு சென்றனர். 


இறந்த அருணா மார்க்ரெட் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/