காட்டுமன்னார்கோயில் அருகே சாலை மறியல் செய்த மக்கள் மீது காரை ஏற்றி கொள்ள முயற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

காட்டுமன்னார்கோயில் அருகே சாலை மறியல் செய்த மக்கள் மீது காரை ஏற்றி கொள்ள முயற்சி

காட்டுமன்னார்கோயில் அருகே சாலை மறியல் செய்த மக்கள் மீது காரை ஏற்றி கொள்ள முயற்சி பரபரப்பு


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் மாமங்கலம் ஊராட்சியில் ஆண்டிபாளையம் கிராமத்தில் புத்தேரி என்ற ஏரியில் தமிழ்நாடு அரசு சென்னை கும்பகோணம் சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுத்து செல்லப்படுகிறத. 



இந்த நிலையில் மண் எடுத்து செல்லும் பொழுது மாமங்கலம் கிராமத்தின் தெரு வழியாக செல்வதால் சாலை குறுகியதாக உள்ளதால் மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை மேலும் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த வழியாக தான் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காட்டுமன்னார்கோவில் செல்வதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகிறார்கள். 

மேலும் பள்ளி கல்லூரி செல்வதற்கான வாகனமும் இந்த வழியாகத்தான் செல்கிறது இதனால் மாமங்கலம்  கிராமத்தின் சிறு குழந்தைகள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் பள்ளி கல்லூரி செல்லும் சிறு பிள்ளைகள் சாளைகளின் தண்ணீர் தெளிப்பதால் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனைக்கு செல்வதுண்டு.. தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் சாலிகளிலே கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இது சம்பந்தமாக மாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காட்டுமன்னார்கோயில் வருவாய் வட்டாட்சியர் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்


சாலை மறியல்


கிராமத்தின் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர் தகவல் அறிந்த சோழத்தரம் காவல்துறை உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை செய்தார் அப்பொழுது அதி வேகமாக ரெவென்யு என்று எழுதப்பட்ட கார் சாலை மறியல் செய்தவர் மீது ஏற்றி விடுவது போல் அதிவேகமாக வந்து அருகாமையில் நின்றது அதில் இறங்கிய ஒப்பந்ததாரர் அனைவருக்கும் எச்சரிக்கை எடுத்தார் இதனால் கீழே அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மேலும் பதற்றம் மற்றும் பரபரப்பு உண்டானது தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்தி வருகிறார்.


மண் தனியார்க்கு விற்பனை


மேலும் அங்கு எடுக்கப்படும் மண் தனியாருக்கு ரூபாய் 6000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் தொடர்ந்து மண் எடுத்து வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்


இதனால் மாமங்கலம் கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

*/