கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பில் உள்ள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து ஆங்கில புத்தாண்டு மற்றும் வரஇருக்கின்ற தமிழர் பண்டிகையானபொங்கல் பண்டிகைக்கு அனைத்து வியாபாரிகளின் சார்பாகவும் தங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன்படி சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், ஆகியோருக்கு சால்வை அணிவித்து தங்கள் வியாபாரிகள் சங்கத்தின் ஆங்கில புதுவருட நாட்காட்டியை நினைவுப் பரிசாக அளித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதுபோல் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத்தின் தலைவர் தங்க.குலோத்துங்கன் அவர்களை வர்த்தக சங்க நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து புது வருட நாட்காட்டியை நினைவுப்பரிசாக அளித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த மரியாதை நிமித்தமானசந்திப்பு நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு வர்த்தக சங்க தலைவர் ஏ எம்.மகாராஜன், பொதுச் செயலாளர் அரிமா டாக்டர் ஆர். மணிமாறன், பொருளாளர் எஸ் பி முத்துராமன், செயலாளர் ஆனந்தன், கௌரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கிஷோர் குமார், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment