பொங்கல் தொகுப்பு மற்றும் மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

பொங்கல் தொகுப்பு மற்றும் மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிறந்தநாள் விழா

பொங்கல் தொகுப்பு மற்றும் மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிறந்தநாள் விழா. 



கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தின்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு மா பொடையூர், ஆவட்டி மங்களூர், மலையனூர், கல்லூர், ஆலம்பாடி ஆகிய ஊர்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் KNT சுகுணா சங்கர் பொதுமக்களுக்கு அரிசி சர்க்கரை செங்கரும்பு உங்கள் பரிசு நிதியாக 1000 ரூபாய் வழங்கினார்.


அனைத்து ஊர்களில் உள்ள நியாய விலை கடை சேல்ஸ்மேன், ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆட்மா குழுத் தலைவர் பா.செங்குட்டுவன், வடக்கு ஒன்றிய பொருளாளர் தனபால் மற்றும் அனைத்து ஊர்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு ஊர்களில் மங்களூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் KNT. சங்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அதைத்தொடர்ந்து இறுதியாக KNT குரூப் நிர்வாகிகள் வானவேடிக்கை முழங்க கேக் வெட்டி அங்கிருந்த பொதுமக்களுக்கு கொடுத்து கொண்டாடினார்கள்

No comments:

Post a Comment

*/