கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வணிகத்துறை மேற்கொண்டு வரும் ஜி எஸ் டி டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையைக் கைவிடக் கோரியும் உணவு பாதுகாப்புத் துறை சட்டங்கள் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திடக்கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவுறுத்தலின்படி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முதல் கட்டப்போராட்டமாக சேத்தியாத்தோப்பு வணிகர்கள் தங்கள் கடைகள் முன்பாக கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை வைத்தும், பேட்ஜுகள் அணிந்தும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு வர்த்தக சங்கத் தலைவர் ஏ எம்.மகாராஜன், பொதுச் செயலாளர் லயன் டாக்டர்.ஆர். மணிமாறன், பொருளாளர் எஸ் பி. முத்துராமன், செயலாளர் ஆனந்தன், துணைத் தலைவர் லோகநாதன், அமிர்தம் மெடிக்கல் அன்பழகன் மற்றும் சேத்தியாத்தோப்பு வர்த்தக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஜி எஸ் டி டெஸ்ட் பர்ச்சேஸுக்கான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

No comments:
Post a Comment