ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீசீனுவாசவரத பெருமாள் ஆலயத்தில் இன்று கூடாரவல்லியை முன்னிட்டு சுவாமி வீதியுலா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீசீனுவாசவரத பெருமாள் ஆலயத்தில் இன்று கூடாரவல்லியை முன்னிட்டு சுவாமி வீதியுலா

மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று கூடாரவல்லி. மார்கழி மாதத்தில் பெருமாளின் அருளை பெறுவதற்காக இருக்கப்படுவது பாவை நோன்பு ஆகும். மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டால் நல்ல வரன் அமையும். சிறப்பான வாழ்க்கை அமைவதுடன், குடும்பம் செழிக்கும் என்பது நம்பிக்கை.


பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாவை நோன்பு இருந்தே, திருமாலின் திருவடிகளை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்கழி மாதத்தில் அதிகாலையில் அனைத்து வைணவ தலங்களிலும் வழக்கமான சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல்களே இசைப்படுகின்றன.  


திருமாலின் அருளை பெறுவதற்காகவும், திருமாலின் திருவடியாக வைகுண்ட பதவியை அடைவதற்கும் வழி செய்யும் பாவை நோன்பின் நிறைவு நாளையே கூடாரவல்லி என போற்றுகின்றோம். இதன் சிறப்பையே திருப்பாவையின் 27 வது பாசுரத்தில், கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா என ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்த நாளில் பல வகையான இனிப்புகள் செய்து திருமாலுக்கு படைப்பது வழக்கம்.


ஆண்டாள் நாச்சியார், திருமாலின் திருவடியை அடைந்த மோட்ச வைபவநாளே கூடாரவல்லி என்ற பெயரில் ஆண்டுதோறும் மார்கழியின் 27 வது நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் அக்காரஅடிசல் செய்து கிருஷ்ணருக்கு படைப்பது வழக்கம். அனைத்து வைணவ தலங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.


அதன்படி மங்கலம்பேட்டை புது நெசவாளர் வீதியில் உள்ள ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீசீனுவாசவரத பெருமாள் ஆலயத்தில் இன்று கூடாரவல்லியை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/