கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளராக பணிபுரியும் பணியாளர்கள் சார்பில், ஜங்ஷன் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான ஆட்டுத்தொட்டி இடத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சேகர் தலைமை தாங்கினார்,நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி கலந்துகொண்டு நகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மேலும் 12 வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன் 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கருணாநிதி 5வது நகர மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் நகராட்சி அலுவலர் சிவராமகிருஷ்ணன் மேற்பார்வையாளர்கள் செல்வம் கணபதி ஆறுமுகம் உட்பட பல கலந்து கொண்டனர்...

No comments:
Post a Comment